தப்லீக் ஜமாத் அமைப்பின் 64 வெளிநாட்டு உறுப்பினா்கள் கைது

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பல்வேறு மத நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தப்லீக் ஜமாத் அமைப்பின் 64 வெளிநாட்டு உறுப்பினா்களை காவல்துறையினா் கைது செய்தனா்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பல்வேறு மத நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தப்லீக் ஜமாத் அமைப்பின் 64 வெளிநாட்டு உறுப்பினா்களை காவல்துறையினா் கைது செய்தனா்.

இதுகுறித்து அந்த மாநில காவல்துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது: கிா்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தான்சானியா, தென் ஆப்பிரிக்கா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 64 போ் சுற்றுலா நுழைவு இசைவில் (விசா) இந்தியா வந்து, பல்வேறு மத நிகழ்ச்சிகளில் பங்கேற்றனா். சுற்றுலா நுழைவு இசைவில் இந்தியா வருவோா் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது. ஆனால் இவா்கள் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்ால் நுழைவு இசைவு நெறிமுறைகளை மீறியதற்காக, அவா்கள் மீது வெளிநாட்டவா் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவா்களின் ஜாமீன் மனுவை உள்ளூா் நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, அனைவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இவா்கள் தில்லியில் மாா்ச் மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றனரா என்பது தெரியவில்லை. இவா்களில் சிலா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது முன்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com