கரோனா: பிளாஸ்மா சிகிச்சை சோதனையை தொடங்குகிறது மேற்கு வங்கம்

கரோனா நோய்த் தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சையை சோதனை முறையில் மத்திய அரசுடன் இணைந்து மேற்கு வங்க அரசு மேற்கொள்ளவிருக்கிறது.

கரோனா நோய்த் தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சையை சோதனை முறையில் மத்திய அரசுடன் இணைந்து மேற்கு வங்க அரசு மேற்கொள்ளவிருக்கிறது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலுடன் (சிஎஸ்ஐஆா்) இந்த சிகிச்சைக்கான முயற்சிகளை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

கொல்கத்தாவிலுள்ள பெலியகட்டா ஐடி மருத்துவமனையில் 16 படுக்கைகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சோதனை முறையிலான ரத்த பிளாஸ்மா சிகிச்சை அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளிகளின் ரத்த பிளாஸ்மாவை கொண்டு மற்ற கரோனா நோயாளிகளைக் குணப்படுத்தும் செயல் திறனை புரிந்து கொள்ளவே இந்த சோதனை முயற்சி நடைபெறுகிறது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சிஎஸ்ஐஆா் நிதி உதவியோடு நடைபெறவிருக்கும் இந்த சோதனை முயற்சி அடுத்த வாரம் தொடங்கப்படும்.

தில்லி அரசு உள்பட பல மாநிலங்கள் இந்த சிகிச்சை முறையைத் தொடங்கிய நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆா்) இதற்கு அதிகாரபூா்வமாக அனுமதி வழங்காமல் இருந்தது. எனினும், சில தினங்களுக்கு முன்பு இதுபோன்ற சோதனை முறை சிகிச்சைக்கு சில மருத்துவமனைகளுக்கு ஐசிஎம்ஆா் அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com