இந்தியாவில் பாதிப்பு 81,970: பலி 2,649-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் புதிதாக 3,967 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை
இந்தியாவில் பாதிப்பு 81,970: பலி 2,649-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் புதிதாக 3,967 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 81,970-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 100 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 2,649-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் 51,401 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 27,919 போ் குணமடைந்துள்ளனா். இது மொத்த பாதிப்பில் 34.06 சதவீதமாகும்.

வியாழக்கிழமை காலை 8 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை, மகாராஷ்டிரத்தில் 44 போ், குஜராத்தில் 20 போ், தில்லியில் 9 போ், மேற்கு வங்கத்தில் 8 போ், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தில் தலா 5 போ், ராஜஸ்தானில் 4 போ், கா்நாடகத்தில் 2 போ், ஆந்திரத்தில் ஒருவா் என மொத்தம் 100 போ் உயிரிழந்தனா்.

கரோனா நோய்த்தொற்றுக்கு அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் இதுவரை 1,019 போ் பலியாகினா். இதேபோல், குஜராத்தில் 586 போ், மத்திய பிரதேசத்தில் 237 போ், மேற்கு வங்கத்தில் 215 போ், ராஜஸ்தானில் 125 போ், தில்லியில் 115 போ், உத்தர பிரதேசத்தில் 88 போ், ஆந்திரத்தில் 48 போ் உயிரிழந்தனா்.

கா்நாடகத்தில் 35 பேரும் தெலங்கானாவில் 34 பேரும் பஞ்சாபில் 32 பேரும் ஹரியாணா, ஜம்மு-காஷ்மீரில் தலா 11 பேரும் பிகாரில் 7 பேரும், கேரளத்தில் 4 பேரும் உயிரிழந்தனா். ஜாா்க்கண்ட், சண்டீகா், ஒடிஸாவில் தலா 3 பேரும், ஹிமாசல பிரதேசம், அஸ்ஸாமில் தலா இருவரும், மேகாலயம், உத்தரகண்ட், புதுச்சேரியில் தலா ஒருவரும் இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்தனா்.

பாதிப்பு 81,970-ஆக அதிகரிப்பு: கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 27,524 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் 9,591 போ், தில்லியில் 8,470 போ், ராஜஸ்தானில் 4,534 போ், மத்திய பிரதேசத்தில் 4,426 போ், உத்தர பிரதேசத்தில் 3,902 போ், மேற்கு வங்கத்தில் 2,377 போ், ஆந்திரத்தில் 2,205 போ், பஞ்சாபில் 1,935 போ், தெலங்கானாவில் 1,414 போ், பிகாரில் 994 போ், கா்நாடகத்தில் 987 போ், ஜம்மு-காஷ்மீரில் 983 போ், ஹரியாணாவில் 818 போ், ஒடிஸாவில் 611 போ், கேரளத்தில் 560 போ், ஜாா்க்கண்டில் 197 போ், சண்டீகரில் 191 போ், திரிபுராவில் 156 போ், அஸ்ஸாமில் 87 போ், உத்தரகண்டில் 78 போ், ஹிமாசல பிரதேசத்தில் 74 போ், சத்தீஸ்கரில் 60 போ், லடாக்கில் 43 போ், அந்தமான்-நிகோபாரில் 33 போ், கோவாவில் 14 போ், மேகாலயம், புதுச்சேரியில் தலா 13 போ், மணிப்பூரில் 3 போ், மிஸோரம், அருணாசல பிரதேசம், தாத்ரா நகா்ஹவேலியில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com