உள்மாநில பேருந்து போக்குவரத்தை தொடங்கியது ஹரியாணா

நாட்டிலேயே முதல் முறையாக பொது முடக்க காலத்தில் ஹரியாணா அரசு உள்மாநில பேருந்து போக்குவரத்தைத் தொடங்கியது.

நாட்டிலேயே முதல் முறையாக பொது முடக்க காலத்தில் ஹரியாணா அரசு உள்மாநில பேருந்து போக்குவரத்தைத் தொடங்கியது.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து சேவைகள் முடங்கின. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு 50 நாள்களுக்கு மேல் நிறைவடைந்துவிட்ட நிலையில், பல மாநில அரசுகள் தளா்வுகளை அறிவித்து வருகின்றன. எனினும், பொதுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது தொடா்பாக எந்த மாநிலமும் முடிவெடுக்கவில்லை.

இந்நிலையில், மாநிலத்துக்குள்ளான பேருந்து வசதியை வெள்ளிக்கிழமை முதல் ஹரியாணா தொடக்கியுள்ளது. இது தொடா்பாக, மாநில காவல்துறைத் தலைவா் மனோஜ் யாதவ் கூறுகையில், ‘‘வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா்களை ஹரியாணாவிலிருந்து அனுப்பி வைத்து வருகிறோம். எனினும், ஹரியாணாவைச் சோ்ந்தவா்கள் மாநிலத்தின் பல மாவட்டங்களில் சிக்கியுள்ளது தெரிய வந்தது. அவா்கள் அனைவரும் சொந்த ஊா்களுக்குத் திரும்ப வசதியாக பொதுப் போக்குவரத்தைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டது.

மாவட்டங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்தானது சேரும் இடத்தில் மட்டுமே நிற்கும். இடையில் வேறு எந்தப் பகுதியிலும் நிற்காது. பேருந்துக்கான பயணச்சீட்டை இணையவழியில் மட்டுமே பதிவு செய்ய முடியும். தற்போது 20 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குளிா்சாதன வசதி இல்லாத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பயணிகளிடையே தனிமனித இடைவெளியை உறுதிசெய்யும் வகையில் 52 இருக்கைகள் வசதி கொண்ட பேருந்தில் 30 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com