கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரளத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று: பினராயி விஜயன்

​கேரளத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


கேரளத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பற்றிய சமீபத்திய அறிவிப்புகளை வெளியிடுவதற்காக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் பேசுகையில், "கேரளத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது. இதில் 130 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக பாதிப்புக்குள்ளாகியுள்ள 29 பேரில் 21 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள், 7 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். ஒருவருக்கு தொடர்பில் இருந்ததன்மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது." என்றார்.

இதையடுத்து, கட்டுப்பாடு தளர்வுகள் பற்றி பேசிய அவர், "வணிக வளாகங்கள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகளுடன் செயல்படலாம். முடி திருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்கள் குளிர்சாதனக் கருவிகள் இல்லாமல் செயல்பட வேண்டும். முடி திருத்தம் மற்றும் முகம் மழித்தலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இணையவழி விற்பனைக்கான தளம் தயாரான பிறகு அரசு நடத்தும் மதுக்கடைகள் திறக்கப்படும். மதுக்கூடங்களில் வீட்டிற்கு வாங்கிச் செல்ல மட்டும் அனுமதி." என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com