10 வயது இந்திய-அமெரிக்க மாணவிக்கு அதிபர் டிரம்ப் கௌரவம்

அமெரிக்காவில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு பிஸ்கட், வாழ்த்து அட்டைகளை அனுப்பி உதவிய 10 வயது
இந்திய வம்சாவளி மாணவி ஸ்ரவ்யாவை கௌரவித்த அதிபர் டிரம்ப்.
இந்திய வம்சாவளி மாணவி ஸ்ரவ்யாவை கௌரவித்த அதிபர் டிரம்ப்.

புதுதில்லி /வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு பிஸ்கட், வாழ்த்து அட்டைகளை அனுப்பி உதவிய 10 வயது இந்திய-அமெரிக்க மாணவியை, அதிபர் டொனால்ட் டிரம்ப் கௌரவித்துள்ளார்.

உலகிலேயே கரோனா நோய்த் தொற்றால் அதிகம் பாதித்த நாடான அமெரிக்காவில், இதுவரை 14 லட்சம் பேர் நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 89,562 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. மருத்துவப் பணியாளர்களும், தீயணைப்புத் துறையினரும் நோய் பரவல் தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவப் பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் போன்ற முன்கள பணியாளர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலா
னியா இருவரும் நேரில் பங்கேற்று அவர்களைக் கௌரவித்தனர்.

அவ்வாறு கௌரவிக்கப்பட்டவர்களில் மேரிலேண்ட் மாகாணம், ஹானோவர் ஹில்ஸ் ஆரம்பப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வரும் 10 வயது இந்திய வம்சாவளி சாரணியர் படை மாணவியான ஸ்ரவ்யா அன்னப்பரெட்டியும் ஒருவர் ஆவார். இவர்களுடைய பெற்றோர் ஆந்திரத்திலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்கள்.

ஸ்ரவ்யா மற்றும் அவரது சாரணியர் பிரிவைச் சேர்ந்த மேலும் இரு மாணவியர் இணைந்து பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் வாழ்த்து அட்டைகளை கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தீயணைப்புப் படை வீரர்களுக்கு அனுப்பியுள்ளனர். இதனைப் பாராட்டி ஸ்ரவ்யா உள்ளிட்ட மாணவியரை அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தார்.

"அமெரிக்காவை மறுகட்டமைக்கவும், புதிய உச்சத்தை எட்டவும் உதவும் வகையில் அனைவருக்குள்ளும் பிணைப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்' என்று டிரம்ப் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com