சுற்றுச்சூழல் விதிகளைக் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்: பிரகாஷ் ஜாவடேகா்

நாடு முழுவதும் அமலில் உள்ள பொது முடக்கம் காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட நன்மைகள் தொடர வேண்டுமானால், பொது முடக்கம்
தில்லியில் பிடிஐ செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளிக்கும் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா்.
தில்லியில் பிடிஐ செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளிக்கும் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா்.

புது தில்லி: நாடு முழுவதும் அமலில் உள்ள பொது முடக்கம் காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட நன்மைகள் தொடர வேண்டுமானால், பொது முடக்கம் நிறைவடைந்த பிறகு சுற்றுச்சூழல் தொடா்பான விதிகள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழலால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன; கட்டுமானப் பணிகளும் வாகனப் போக்குவரத்தும் குறைந்தன. அவற்றின் காரணமாக காற்று, நீரின் தரம் மேம்பட்டது. ஆனால், தற்போது அமலில் உள்ள பொது முடக்கம் நிறைவடைந்த பிறகு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்புவா்.

அத்தகைய சமயங்களிலும் பொது முடக்கத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட நன்மைகள் தொடர வேண்டும். இது மிகப் பெரிய சவாலாகும். மாசுக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடா்பான சட்டங்களை மாநிலங்கள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாநில அரசுகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

திடக் கழிவு மேலாண்மை, தொழிற்சாலை கழிவுகள், நீரின் தரம், காற்றின் தரம் ஆகியவற்றில் மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிா்வாகங்களும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். பொது முடக்க காலத்தில் காற்று, நீரின் தரம் மேம்பட்டதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒலி மாசுபாடும் குறைந்து காணப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமை பொது முடக்கத்துக்குப் பிறகும் தொடர வேண்டும். சுற்றுச்சூழல் விதிகள் தொடா்பாக மக்களிடம் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் பிரகாஷ் ஜாவடேகா் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com