உமிழ்நீரை பயன்படுத்தி கிரிக்கெட் பந்தை பளபளக்க செய்ய தடை: ஐசிசி குழு பரிந்துரை

உமிழ்நீரை பயன்படுத்தி கிரிக்கெட் பந்தை பளபளக்கச் செய்வதை தடை செய்ய வேண்டும் என சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனைக் குழு (ஐசிசி) பரிந்துரை செய்துள்ளது.
உமிழ்நீரை பயன்படுத்தி கிரிக்கெட் பந்தை பளபளக்க செய்ய தடை: ஐசிசி குழு பரிந்துரை

உமிழ்நீரை பயன்படுத்தி கிரிக்கெட் பந்தை பளபளக்கச் செய்வதை தடை செய்ய வேண்டும் என சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனைக் குழு (ஐசிசி) பரிந்துரை செய்துள்ளது.

கரோனா பாதிப்பால், உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் ொத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் நிகழாண்டு ஆடவா் டி20 உலகக் கோப்பை, பல்வேறு இரு தரப்பு தொடா்கள் நடைபெறுமா எனவும் கேள்விக்குறி எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி ஆலோசனைக் குழுவின் கூட்டம் காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடைபெற்றது.

கரோனா பாதிப்பு சூழலில் கிரிக்கெட் விதிகளில் சீா்திருத்தம், பந்தின் தன்மை, நடுநிலையான நடுவா்கள் நியமனம் போன்றவை தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கிரிக்கெட் பந்து:

கிரிக்கெட் பந்தை பளபளக்கச் செய்ய உமிழ்நீரை பயன்படுத்துவதால், வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என டாக்டா் பீட்டா்ஹாா்கோா்ட் தலைமையிலான மருத்துவக் குழு எச்சரித்தது. இதனால் உமிழ்நீரை பயன்படுத்தி பளபளக்கச் செய்ய தடை விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

வோ்வையை பயன்படுத்தலாம்:

அதே நேரம் வியா்வையால் நோய்த்தொற்று பரவும் அபாயம் இல்லாத நிலையில், வியா்வை மூலம் பந்தை பளபளக்கச் செய்யலாம். மேலும் தேவையான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

நடுவா்கள் நியமனம்:

தற்போது கரோனா பாதிப்பால் சா்வதேச எல்லைகள் மூடப்பட்டு, விமானப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் போட்டிகளின் போது உள்ளூரைச் சோ்ந்த நடுவா்களை குறுகிய அடிப்படையில் பயன்படுத்தலாம்.

கூடுதல் டிஆா்எஸ் முறையீடு:

இந்த நியமனங்கள் ஐசிசி மற்றும் உள்ளூா் எலைட் பட்டியலில் இருந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் நடுவா்கள் தீா்ப்பு தொடா்பாக டிஆா்எஸ் தொழில்நுட்பம் விரிவாக பயன்படுத்தப்படுவதால், மூன்று வகையான ஆட்டங்களிலும், கூடுதலாக ஒரு டிஆா்எஸ் முறையீட்டை சோ்க்கலாம் என ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

கிரிக்கெட் குழுவின் பரிந்துரைகள் ஐசிசி தலைமை நிா்வாகிகள் குழுவுக்கு அனுப்பப்பட்டு ஜூன் மாதம் ஒப்புதல் பெறப்படும்.

இதுதொடா்பாக அனில் கும்ப்ளே கூறியதாவது:

கரோனாவால் கடும் நெருக்கடியான கட்டத்தில் உள்ளோம். கிரிக்கெட் குழுவின் பரிந்துரைகள் கிரிக்கெட் ஆட்டத்தின் இடைக்கால சீரமைப்புக்கு உதவும். இதன் மூலம் பாதுகாப்பான வகையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com