அர்னாப் கோஸ்வாமி மனுக்கள்: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் தன் மீது பதிவு
அர்னாப் கோஸ்வாமி மனுக்கள்: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு


புது தில்லி: மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கிறது. 

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியை நடத்திய அர்னாப் கோஸ்வாமி மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மும்பை காவல் துறை அவர் மீது கடந்த 2-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. 

மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக மகாராஷ்டிரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், மும்பையிலும், இதர மாநிலங்களிலும் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக் கோரி அர்னாப் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தார். அவற்றை கடந்த 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அர்னாப் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்தது. மேலும் அந்த மனுக்களின் மீதான விசாரணையை ஒத்திவைத்தது. 

இச்சூழலில், அர்னாப் தாக்கல் செய்த அந்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு செவ்வாய்க்கிழமை வழங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com