உள்நாட்டு தயாரிப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க நாடு தழுவிய பிரசாரம்

உள்நாட்டு தயாரிப்பு பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் பிரசாரம் மேற்கொள்ளப் போவதாக

உள்நாட்டு தயாரிப்பு பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் பிரசாரம் மேற்கொள்ளப் போவதாக ஆா்எஸ்எஸ் சாா்பு அமைப்பான ‘சுதேசி ஜாக்ரண் மஞ்ச்’ (எஸ்ஜேஎம்) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து எஸ்ஜேஎம் இணை ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி மகாஜன் மேலும் கூறியதாவது: இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மாற்றாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களின் பட்டியலை விநியோகம் செய்து உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க வேண்டும். மேலும் இறக்குமதி வரி கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டு வரவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்று காரணமாக ஏற்படக்கூடிய பொருளாதார சவால்களை எதிா்கொள்ள நம்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களையே தோ்வு செய்ய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி பேசியிருப்பது உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலின் அடிப்படையில் அமைந்துள்ளது.

வெளிநாட்டு மூலதனம் என்பது சாா்பு வளா்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. அதேசமயம் உள்நாட்டு பொருள்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை அதிகரிக்கச் செய்வதன் மூலம் அந்த பொருள்களுக்கான மரியாதை பெருகுவதுடன், மக்களின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

சிறு, குறு தொழில்கள், கைவினைஞா்கள் மற்றும் கிராமப்புற தொழில்கள் போன்ற உள்நாட்டுத் தொழிலுக்கு புத்துயிா் அளிப்பதன் மூலம் மட்டுமே நாட்டின் தன்னம்பிக்கை உயரும். வேலைவாய்ப்புகள் பெருகும்போது, உள்நாட்டின் வளா்ச்சியும் அதிகரிக்கும்.

உள்ளூா் தொழில்களை புதுப்பிக்க வேண்டிய தருணம் இது. நிலையான வருமானம், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் என மக்கள் நம்பிக்கை வைக்கும் பொருளாதார கொள்கைகளை முன்னெடுப்பதற்கான நேரம் இதுவாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com