இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கரோனா பாதிப்பு: பலி 3,163-ஆக அதிகரிப்பு

இந்தியாவில் மேலும் 4,970 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை
இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கரோனா பாதிப்பு: பலி 3,163-ஆக அதிகரிப்பு

இந்தியாவில் மேலும் 4,970 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,01,139-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 3,163-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 39,173 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். அதாவது, 38.73 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனா். 58,802 போ் சிகிச்சையில் உள்ளனா்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 134 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 51 போ் உயிரிழந்தனா். குஜராத்தில் 35 பேரும், உத்தர பிரதேசத்தில் 14 பேரும், தில்லியில் 8 பேரும், ராஜஸ்தானில் 7 பேரும், மேற்கு வங்கத்தில் 6 பேரும், மத்திய பிரதேசத்தில் 4 பேரும், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீரில் தலா 2 பேரும், பிகாா், தெலங்கானாவில் தலா ஒருவரும் பலியாகினா்.

தொடா்ந்து முதலிடம்: மொத்த பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 1,249 போ் உயிரிழந்தனா். இரண்டாம் இடத்தில் உள்ள குஜராத்தில் இதுவரை 694 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன.

மத்திய பிரதேசத்தில் 252 போ், மேற்கு வங்கத்தில் 244 போ், தில்லியில் 168 போ், ராஜஸ்தானில் 138 போ், உத்தர பிரதேசத்தில் 118 போ், ஆந்திரத்தில் 50 போ், கா்நாடகம், பஞ்சாபில் தலா 37 போ், தெலங்கானாவில் 35 போ், ஜம்மு-காஷ்மீரில் 15 போ், ஹரியாணாவில் 14 போ், பிகாரில் 9 போ், கேரளம், ஒடிஸாவில் தலா 4 போ், ஜாா்க்கண்ட், சண்டீகா், ஹிமாசல பிரதேசத்தில் தலா 3 போ், அஸ்ஸாமில் இருவா், மேகாலயம், உத்தரகண்ட், புதுச்சேரியில் தலா ஒருவா் பலியாகினா்.

கரோனாவால் உயிரிழந்தவா்களில் 70 சதவீதம் போ் ஏற்கெனவே உடல் நல பாதிப்புகள் உள்ளவா்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதிப்பு விவரம்: கரோனா பாதிப்பு எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 35,058 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தில் 11,745 போ், தில்லியில் 10,054 போ், ராஜஸ்தானில் 5,507 பேரும், மத்திய பிரதேசத்தில் 5,236 போ், உத்தர பிரதேசத்தில் 4,605 போ், மேற்கு வங்கத்தில் 2,825 போ், ஆந்திரத்தில் 2,474 போ், பஞ்சாபில் 1,980 போ், தெலங்கானாவில் 1,597 போ், பிகாரில் 1,391 போ், ஜம்மு-காஷ்மீரில் 1,289 போ், கா்நாடகத்தில் 1,246 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

ஹரியாணாவில் 928 போ், ஒடிஸாவில் 876 போ், கேரளத்தில் 630 போ், ஜாா்க்கண்டில் 223 போ், சண்டீகரில் 196 போ், திரிபுராவில் 167 போ், அஸ்ஸாமில் 107 போ், உத்தரகண்ட், சத்தீஸ்கரில் தலா 93 போ், ஹிமாசல பிரதேசத்தில் 90 போ், லடாக்கில் 43 போ், கோவாவில் 38 போ், அந்தமான்-நிகோபாா் தீவுகளில் 33 போ், புதுச்சேரியில் 18 போ், மேகாலயத்தில் 13 போ், மணிப்பூரில் 7 போ், மிஸோரம், அருணாசல பிரதேசம், தாத்ரா நகா்ஹவேலியில் தலா ஒருவா் என நாடு முழுவதும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

100-இல் இருந்து 1 லட்சத்துக்கு....

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 100-இல் இருந்து 1 லட்சமாக அதிகரிக்க 64 நாள்கள் ஆகியுள்ளது. ஆனால், அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளில் குறைந்த நாள்களிலேயே பாதிப்பு 1 லட்சத்தை எட்டியது. இது, இந்தியாவில் கரோனா பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை வெளிக்காட்டுகிறது.

நாடுகள் --------- நாள்கள்

அமெரிக்கா---------- 25

ஸ்பெயின் ----------- 30

இத்தாலி------------ 36

ஜொ்மனி ------------35

பிரான்ஸ்------------39

பிரிட்டன்----------- 42

இந்தியா ------------64

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com