காசநோய்க்கு பயன்படும் கருவிகளை கரோனா பரிசோதனைக்கும் பயன்படுத்தலாம்: ஐசிஎம்ஆர்

காசநோயை பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் கருவிகளை கரோனா பரிசோதனைக்கும் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 
காசநோய்க்கு பயன்படும் கருவிகளை கரோனா பரிசோதனைக்கும் பயன்படுத்தலாம்: ஐசிஎம்ஆர்

காசநோய்க்கு பயன்படுத்தப்படும் கருவிகளை கரோனா பரிசோதனைக்கும் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு வகைகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் கரோனா பரிசோதனையில் பிசிஆர் சோதனை முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மருந்துக்கு கட்டுப்படாத காசநோயை பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் கருவிகளை கரோனா பரிசோதனைக்கும் பயன்படுத்த ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது. மேலும், இவற்றை முதல்கட்ட பரிசோதனைக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்ய மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா பரிசோதனை அளவை அதிகரிக்கும் பொருட்டு கடந்த ஏப்ரல் மாதம் ஐசிஎம்ஆர் இந்த சோதனை முயற்சியில் இறங்கியது. அதன் அடிப்படையில் 'TrueNat' என்ற இந்த சோதனையில், கருவிகளை பயன்படுத்தும்போது ,நெகடிவ்' என்று வந்தால் மீண்டும் பரிசோதிக்க தேவையில்லை என்றும் அதே நேரத்தில் 'பாசிட்டிவ்' என்று வந்தால் மீண்டும் ஒருமுறை சோதனை மேற்கொண்டு வைரஸ் தொற்றை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com