வருவாய் இல்லை; ஓலா நிறுவனத்தில் 1,400 ஊழியர்கள் பணி நீக்கம்

ஊரடங்கு காரணமாக ஓலா நிறுவனம் 1,400 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
வருவாய் இல்லை; ஓலா நிறுவனத்தில் 1,400 ஊழியர்கள் பணி நீக்கம்

ஊரடங்கு காரணமாக ஓலா நிறுவனம் 1,400 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. 

கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. ஊழியர்களை குறைக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்திய நிலையிலும், பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா, ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சுமார் 1,400 ஊழியர்களைபணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளது. 

கடந்த இரண்டு மாதங்களில் ஓலாவின் வருவாயில் 95 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இதனால் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட ஓலா நிறுவனத்தில் பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், இதனால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு மூன்று மாத நிலையான ஊதியத்தை உள்ளடக்கிய குறைந்தபட்ச நிதியை வழங்கும் என்றும் கூறினார். 

அதேபோன்று,அவர்களது மருத்துவ, ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீட்டுத் தொகை டிசம்பர் 31 வரை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று, ஊபர் நிறுவனமும் நேற்று 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com