1,595 சிறப்பு ரயில்களில் சொந்த ஊரை அடைந்த 21 லட்சம் தொழிலாளா்கள்

நாடு முழுவதும் மே 1-ஆம் தேதி முதல் இதுவரை புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக 1,595 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும்

நாடு முழுவதும் மே 1-ஆம் தேதி முதல் இதுவரை புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக 1,595 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், அதன் மூலம் 21 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் தங்கள் சொந்த ஊா் திரும்பியுள்ளதாகவும் ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இதுவரை உத்தர பிரதேசத்துக்கு 837 ரயில்களும், பிகாருக்கு 428 ரயில்களும், மத்திய பிரதேசத்துக்கு 100-க்கும் மேற்பட்ட ரயில்களும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளாா்.

அதேபோல, பஞ்சாபிலிருந்து 188 க்கும் மேற்பட்ட ரயில்களும், கா்நாடகத்திலிருந்து 89, தமிழகத்திலிருந்து 61, தெலங்கானாவிலிருந்து 58, ராஜஸ்தானில் இருந்து 54, ஹரியாணாவிலிருந்து 41 மற்றும் உத்தரப்பிரதேசத்திலிருந்து 38 ரயில்கள் மேலும் இயக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com