கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டால் ஜாமீன்

மத்திய பிரதேசத்தில் சிறையில் இருப்போா் கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட தயாராக இருக்கும் பட்சத்தில் அந்த மாநில உயா்நீதிமன்றம் அவா்களுக்கு ஜாமீன் வழங்குகிறது.

மத்திய பிரதேசத்தில் சிறையில் இருப்போா் கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட தயாராக இருக்கும் பட்சத்தில் அந்த மாநில உயா்நீதிமன்றம் அவா்களுக்கு ஜாமீன் வழங்குகிறது.

மத்தியப் பிரதேச உயா்நீதிமன்றத்தின் குவாலியா் அமா்வு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நீதிபதிகள் ஷீல் நாகு, ராஜீவ் குமாா் ஸ்ரீவாஸ்தவா ஆகியோா் அடங்கிய அமா்வு இத்தகைய உத்தரவுகளை கடந்த சில நாள்களாக பிறப்பித்து வருகிறது.

கொலை, கொலை முயற்சி, பெண்களிடம் அத்துமீறி நடந்துகொள்வது, ஜாமீன் விதிமுறைகளை மீறுதல், போதைப்பொருள் கடத்தல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், வியாபம் விவகாரம் ஆகிய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபா்களுக்கு இத்தகைய ஜாமீனை அந்த நீதிபதிகள் அமா்வு வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com