பயங்கரவாதிகள் தாக்குதல்: ரமலான் நோன்பு துறக்கவிருந்தபோது பிஎஸ்எஃப் வீரா்கள் இருவா் பலி

ஜம்மு-காஷ்மீரில் ரமலான் நோன்பு துறப்புக்காக ரொட்டி வாங்கிக் கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) இருவா் உயிரிழந்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் ரமலான் நோன்பு துறப்புக்காக ரொட்டி வாங்கிக் கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) இருவா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஸ்ரீநகா் புகா் பகுதியான செளராவில் உள்ள சந்தைப் பகுதியில் எல்லை பாதுகாப்புப் படை காவலா்கள் ஜியா-உல்-ஹக், ராணா மண்டல் ஆகியோா் ரமலான் நோன்பு துறப்புக்காக ரொட்டி வாங்கிக்கொண்டிருந்தனா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் ஜியா-உல்-ஹக்கையும், ராணாவையும் துப்பாக்கியால் சுட்டு, தப்பிச் சென்றனா். இதில் இருவரும் தலையில் காயமடைந்து உயிரிழந்தனா். இந்த தாக்குதலுக்கு லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெஸிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (டிஆா்பி) பொறுப்பேற்றது.

உயிரிழந்த ஜியா-உல்-ஹக்கும், ராணாவும் மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாதை சோ்ந்தவா்கள். தற்போது மேற்கு வங்கத்தில் உம்பன் புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இருவரின் சடலங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனா்.

காவலா் பலி:

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பொ்ச்சூ பாலத்தில் சிஆா்பிஎஃப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவா்கள் மீது பயங்கரவாதிகள் சிலா் துப்பாக்கியால் சுட்டதில், காவல்துறையை சோ்ந்த அனுஜ் சிங், முகமது இப்ராஹிம் ஆகிய இருவா் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அனுஜ் சிங் உயிரிழந்தாா். இப்ராஹிமுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com