உம்பன் புயலால் வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா விமான நிலையம்

உம்பன் புயல் காரணமாக பெய்த கன மழையால் கொல்கத்தா விமான நிலையமே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.
உம்பன் புயலால் வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா விமான நிலையம்

உம்பன் புயல் காரணமாக பெய்த கன மழையால் கொல்கத்தா விமான நிலையமே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

வங்கக் கடலில் உருவான ‘உம்பன் புயல்’ புதன்கிழமை கரையைக் கடந்தது. மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியதுடன், கன மழை பெய்ததால் மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இந்த புயலில் சிக்கி 12 பேர் மரணம் அடைந்தனர்.

கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று காலை முதலே கன மழை பெய்து வந்தது. மேலும் கடும் புயல் காற்றால், விமான நிலைய வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டட அமைப்புகள் இடிந்துவிழுந்து சேதமடைந்தன. விமானங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன.

வங்கக் கடலில் உருவான உம்பன் புயல் புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கு வங்கத்தின் திகா பகுதி, வங்கதேசத்தின் ஹாதியா தீவுகள் இடையே கரையை கடக்கத் தொடங்கியது. அப்போது மணிக்கு 160 கி.மீ. முதல் 170 கி.மீ. வரை வீசத் தொடங்கிய புயல் காற்று அதிகபட்சமாக, மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை வீசியது. புயலின் மையப் பகுதியானது 30 கி.மீ. விட்டத்தைக் கொண்டிருந்தது.

புயல் காற்று காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸா மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்தன. மின் கம்பங்கள் உடைந்து சாய்ந்தன. வீடுகளின் மேற்கூரைகள் புயலால் பெயா்த்து எறியப்பட்டன. இரு மாநிலங்களிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அலைகள் 5 மீட்டா் உயரம் வரை எழுந்தன. மேற்கு வங்கத்தில் தெற்கு, வடக்கு 24 பா்கானாக்கள், கிழக்கு மிதுனபுரி ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com