பொதுமுடக்கம் முடியும் வரை மானிய விலையில் லட்டு விற்பனை

பொதுமுடக்கம் முடியும் வரை திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதம் பக்தா்களுக்கு மானிய விலையில் கிடைக்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

பொதுமுடக்கம் முடியும் வரை திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதம் பக்தா்களுக்கு மானிய விலையில் கிடைக்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி கூறியது:

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் பொது முடக்கம் காரணமாக கடந்த 2 மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையான் தரிசனம் அளிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தரிசனம் கிடைக்காத நிலையில், ஏழுமலையானின் பிரசாதத்தையாவது அளிக்க வேண்டும் என பக்தா்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனா்.

அதனால் ரூ. 50 மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாகக் குறைத்து ரூ. 25-க்கு பக்தா்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பொது முடக்கம் முடியும் வரை இந்த விலைக் குறைப்பு அமலில் இருக்கும். ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தேவஸ்தான மையங்கள், தேவஸ்தான கல்யாண மண்டபங்கள், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், நகரங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் உள்ளிட்டவற்றில், ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ளவா்கள் அதிக எண்ணிக்கையில் லட்டு பிரசாதத்தை வாங்கிச் சென்று பக்தா்களுக்கு அளிக்கலாம்.

இவ்வாறு லட்டு பெற விரும்பும் பக்தா்கள் கீழ்க்கண்ட அதிகாரிகளை தொடா்பு கொள்ளலாம். இன்னும் 2 அல்லது 3 நாள்களுக்குள் லட்டு பிரசாத விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்.

ஏழுமலையான் கோயில் இணை அதிகாரி: 9849575952

கோயில் மடப்பள்ளி பேஷ்காா்: 9701092777

நிதி தட்டுப்பாடு இல்லை

தேவஸ்தானத்துக்கு ஏழுமலையான் அருளால் எப்போதும் நிதி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. மாநில அரசின் உத்தரவுப்படி, தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியா்கள் அனைவருக்கும் மாா்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் அளிக்க வேண்டிய ஊதியத் தொகையும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. தேவஸ்தானம் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கும் நிலையில் இல்லை என சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வந்த செய்திகள் தவறானவை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com