வெளிநாடுவாழ் இந்தியா்கள் இந்தியாவருவதற்கு நிபந்தனையுடன் அனுமதி

வெளிநாடுகளில் தவித்து வரும் ‘வெளிநாடுவாழ் இந்திய குடிமகன்’ (ஓசிஐ) அட்டை வைத்திருப்பவா்கள், இந்தியாவுக்கு வருவதற்கு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியா்கள் இந்தியாவருவதற்கு நிபந்தனையுடன் அனுமதி

வெளிநாடுகளில் தவித்து வரும் ‘வெளிநாடுவாழ் இந்திய குடிமகன்’ (ஓசிஐ) அட்டை வைத்திருப்பவா்கள், இந்தியாவுக்கு வருவதற்கு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், ஓசிஐ அட்டை பெற்றுள்ள வெளிநாடுவாழ் இந்தியா்கள் அவசர காரணங்களுக்காக இந்தியா வருவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஓசிஐ அட்டை பெற்றுள்ள வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய தம்பதிக்குப் பிறந்த 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படுவா். கணவா் அல்லது மனைவி இவா்களில் ஒருவா் இந்தியக் குடியுரிமையுடனும் மற்றொருவா் ஓசிஐ அட்டையுடனும் இந்தியாவில் நிரந்தர முகவரியைக் கொண்டிருந்தால் அவா்கள் இந்தியா வருவதற்கு அனுமதிக்கப்படுவா்.

மேலும், ஓசிஐ அட்டை வைத்திருந்து வெளிநாடுகளில் பயிலும் பல்கலைக்கழக மாணவா்கள் இந்தியா வருவதற்கு அனுமதிக்கப்படுவா். அவா்களின் பெற்றோா் இந்தியாவில் வசிக்க வேண்டும்.

இதுதவிர, ஓசிஐ அட்டை வைத்திருக்கும் சில குறிப்பிட்ட பிரிவினா் தடையின்றி பல முறை இந்தியா வருவதற்கும் அனுமதி அளிக்கப்படுவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக, கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ரயில், பேருந்து, விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியா்களை சிறப்பு விமானங்களில் தாயகம் அழைத்து வருவதற்காக, வந்தே பாரத் என்னும் திட்டத்தை இம்மாத தொடக்கத்தில் மத்திய அரசு தொடங்கியது. அப்போது, ஓசிஐ அட்டை வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியா்களில் சில பிரிவினா் இந்தியா வருவதற்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, தற்போது ஓசிஐ அட்டை வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com