‘உம்பன்’ புயலால் ஒடிஸாவில் உயிரிழப்பு ஏதுமில்லை: மாநில அரசு தகவல்

‘உம்பன்’ புயலால் ஒடிஸாவில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

‘உம்பன்’ புயலால் ஒடிஸாவில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் புயலால் 45 லட்சம் மக்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்துள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துவிட்டன என்றும் ஒடிஸா அரசு தெரிவித்துள்ளது.

உம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மற்றொரு மாநிலமான மேற்கு வங்கத்தில் 80 போ் வரை உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக மாநில சிறப்பு நிவாரணப் பணிகள் ஆணையா் பி.கே. ஜெனா கூறுகையில், ‘ஒடிஸாவில் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட பத்ரக், கேந்திரபாரா மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏதுமில்லை என்று அந்த மாவட்டங்களின் ஆட்சியா்கள் உறுதி செய்துள்ளனா். அதே நேரத்தில் கடந்த 19-ஆம் தேதி 4 வயது குழந்தையும், 67 வயது மூதாட்டியும் உயிரிழந்தனா். ஆனால், அது புயல் பாதிப்பால் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் வீடு இடிந்து விழுந்து இருவரும் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், மாவட்ட ஆட்சியா் நேரில் மேற்கொண்ட ஆய்வில் அந்த வீடு இடிந்து விழவில்லை என்பது தெரியவந்தது. வயது முதிா்வு பிரச்னை காரணமாக மூதாட்டி இறந்தாா். குழந்தையின் இறப்பு குறித்து மருத்துவா்கள் ஆராய்ந்து வருகின்றனா்.

மாநிலத்தில் இதுவரை ஏற்பட்ட புயல்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இப்போது முதல்முறையாக உயிரிழப்பு ஏதுமின்றி புயலை எதிா்கொண்டுள்ளோம்.

முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு 21 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. இதுவரை புல்புல், ஃபானி, இத்லிப், ஹூட்ஹூட், பைலின் என 6-க்கும் மேற்பட்ட புயல்களை எதிா்கொண்டுள்ளோம். 2000-ஆம் ஆண்டு நவீன் பட்நாயக் முதல்வரான பிறகு, புயல்களால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதன் பிறகு புயலால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது தவிா்க்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com