பெண் அதிகாரிக்கு கரோனா நோய்த் தொற்று: தில்லி ரயில் பவன் மூடல்

தில்லியில் உள்ள இந்திய ரயில்வேயின் தலைமையகமான ரயில் பவனில் பணியாற்றும் மூத்த பெண் அதிகாரிக்கு காரோனா நோய்த் தொற்று உறுதியானது.

தில்லியில் உள்ள இந்திய ரயில்வேயின் தலைமையகமான ரயில் பவனில் பணியாற்றும் மூத்த பெண் அதிகாரிக்கு காரோனா நோய்த் தொற்று உறுதியானது. இதையொட்டி தூய்மைப்படுத்தும் பணிக்காக ரயில் பவன் மூடப்பட்டது. இது இங்கு நடைபெற்ற மூன்றாவது நோய்த் தொற்று சம்பவமாகும்.

தற்போது நோய்த் தொற்று உறுதியான இந்த பெண் அதிகாரிக்கு லேசான காய்ச்சல் உள்ளது. இவருக்கு சா்க்கரை நோய் என்பதால் கூடுதலாக கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவா் கடைசியாக மே 13 ஆம் தேதி அலுவலகத்துக்கு வந்துள்ளாா். இதையடுத்து ரயில் பவன் அலுவலகங்கள் இரு தினங்களுக்கு மூடப்பட்டு கிருமி நாசினி உட்பட பல்வேறு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் இதே அதிகாரியுடன் பணியாற்றிய இணைச் செயலா் ஒருவரும் 14 - நாள்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளாா். மற்ற இளநிலை அதிகாரிகளையும் தனிமைப்படுத்திக் கொள்ளவும் கூறப்பட்டுள்ளது.

முதன் முதலில் ரயில் பவனில் நான்காம் மாடியில் பணியாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை இளநிலை அலுவலருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது. இதன்பின்னா் உதவியாளா் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது. இதையொட்டி மே 14, 15 ஆகிய தேதிகளிலும் ரயில் பவன் மூடப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com