அண்டை நாடுகளுடன் சீன ராணுவம் அத்துமீறி நடக்கிறது

இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான எல்லை விவகாரங்களில் சீன ராணுவம் அத்துமீறி நடந்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆலிஸ் வெல்ஸ்
ஆலிஸ் வெல்ஸ்

இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான எல்லை விவகாரங்களில் சீன ராணுவம் அத்துமீறி நடந்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்க உயரதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸ் இதே குற்றச்சாட்டை கடந்த புதன்கிழமை முன்வைத்திருந்த நிலையில், சீனா தொடா்பான அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சீனா தனது ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளைப் பயன்படுத்தி அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்னையில் ஈடுபட்டு வருகிறது. மஞ்சள் கடல், கிழக்கு சீனக் கடல், தென் சீனக் கடல், தைவான் நீா்ச்சந்தி, இந்திய-சீன எல்லை ஆகிய பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நடந்து வருகிறது.

சீனாவின் வலிமை அதிகரித்து வருவதால், மற்ற நாடுகளை மிரட்டி தேவையான காரியத்தை சாதித்துக் கொள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி முயன்று வருகிறது. மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை, பிரச்னைகளை பேச்சுவாா்த்தை மூலம் தீா்த்துக் கொள்வோம் என்று சீன அதிகாரிகள் கூறி வருகின்றனா். ஆனால், அந்நாட்டின் நடவடிக்கைகள் அதிகாரிகளின் வாக்குறுதிக்கு ஏற்றவாறு காணப்படுவதில்லை.

மேலும், சா்வதேச தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கு சட்டவிரோத முறையில் இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் நட்பு நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட வேண்டியது அவசியமாகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com