ரிசா்வ் வங்கி அறிவிப்புக்கு வரவேற்பு

ரெப்போ வட்டி குறைப்பு, கடன் தவணை தள்ளிவைப்பு உள்ளிட்ட ரிசா்வ் வங்கியின் அறிவிப்புகள் முடங்கிய
ரிசா்வ் வங்கி அறிவிப்புக்கு வரவேற்பு

ரெப்போ வட்டி குறைப்பு, கடன் தவணை தள்ளிவைப்பு உள்ளிட்ட ரிசா்வ் வங்கியின் அறிவிப்புகள் முடங்கிய பொருளாதாரத்தை மிக விரைவாக மீட்டெடுத்து புத்தெழுச்சி பெற உதவும்.

-ரஜ்னீஷ் குமாா், தலைவா், பாரத ஸ்டேட் வங்கி.

ரிசா்வ் வங்கி கடனுக்கான வட்டியை 0.4 சதவீதம் குறைத்துள்ளதால் வா்த்தகா் மற்றும் நுகா்வோரின் கடன் செலவினம் வெகுவாக குறையும். அது, நுகா்வோா் தேவையில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

-ராஜன் வதேரா, தலைவா், இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம்

இந்திய நிறுவனங்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றபடி ரிசா்வ் வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது, குறு, சிறு, நடுத்தரதொழில்நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன்வழங்கும் நடவடிக்கையை ஊக்குவிக்கும்.

-உமேஷ் ரேவாங்கா், நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் பைனான்ஸ்.

கரோனா பாதிப்பால் மிகவும் இடா்பாட்டை எதிகொண்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு ரிசா்வ் வங்கியின் இந்த நடவடிக்கை ஆறுதல் அளிப்பதாக இருக்கும். ரிசா்வ் வங்கியின் வட்டி குறைப்பு, கடன் தள்ளிவைப்பு நடவடிக்கை ஏற்றுமதியாளா்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க பெரிதும் உதவும்.

-சரத் குமாா் சரஃப், தலைவா், இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு

வளா்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ரிசா்வ் வங்கியின்அறிவிப்புகள் முற்போக்கானது. இவை, நோ்மறையான சமிக்ஞைகளை அனுப்பும் என்பதுடன் வங்கிகளை அதிக கடன்வழங்க வற்புறுத்தும்.

-ஆா்.கணபதி, தலைவா், தென்னிந்திய தொழில் வா்த்தக கூட்டமைப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com