விவசாயப் பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள்; 27 ஆண்டுகளில் மிகப்பெரிய தாக்குதல்

விவசாயப் பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளன.
விவசாயப் பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள்; 27 ஆண்டுகளில் மிகப்பெரிய தாக்குதல்

விவசாயப் பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானில் இருந்து தற்போது மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளன. மத்தியப்பிரதேசத்தில்  கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெட்டுக்கிளி தாக்குதல் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர். 

ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவது வழக்கம். இவைகள் விவசாயப் பயிர்களின் அனைத்து பாகங்களையும் உண்ணும் தன்மை கொண்டதால் அவற்றைத் தாக்கி முற்றிலுமாக அழித்துவிடும். 

அந்தவகையில் இம்மாத தொடக்கத்தில் ராஜஸ்தானின் பல பகுதிகளில் படையெடுத்து பயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகள், தற்போது மத்தியப் பிரதேசத்துக்கு வந்துள்ளன. முதல்வர் சிவ்ராஜ் சிங்கின் தொகுதியான செஹூரில் உள்ள புத்னி பகுதிக்குள் நுழைந்துள்ளன. மாநிலத்தின் நீமுச் மாவட்டத்தின் வழியாக நுழைந்த வெட்டுக்கிளிகள், பின்னர் மால்வா நிமர் வழியாக தற்போது போபாலுக்கு அருகில் இருக்கின்றன.

இதையடுத்து, கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பாலைவன வெட்டுக்கிளிகள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க மாநில வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. வழக்கமாக, வெட்டுக்கிளிகளை விரட்ட தகரம் உள்ளிட்டவை மூலம் அதிக சப்தத்தை எழுப்புவது போன்ற முயற்சிகளில் விவசாயிகள் ஈடுபடுவர். 

இரவு 7 மணி முதல் 9 மணி வரை அவை எங்கு வேண்டுமானாலும் ஓய்வு எடுக்கலாம் எனவும் இதனால் விவசாயிகள் விழிப்புடன் இருந்து அவற்றின் இயக்கத்தை கண்காணிக்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

மேலும், டிராக்டர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் ரசாயன ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்தி அவைகளை விரட்டும் முயற்சியும் இருந்து வருகிறது. 

தற்போது பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இதனை கட்டுப்படுத்தவிட்டால் சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பயிர்களை அழிக்கும் வல்லமை கொண்டது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com