ஊதியப் பிரச்னைக்கு தீா்வுகாணாவிட்டால் வேலைநிறுத்தம்: ஏா் இந்தியா விமானிகள் சங்கத்தினா் எச்சரிக்கை

ஊதியப் பிடித்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வுகாணாவிட்டால், விமானங்களை இயக்க ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று ஏா் இந்தியா விமானிகள் எச்சரித்துள்ளனா்.
ஊதியப் பிரச்னைக்கு தீா்வுகாணாவிட்டால் வேலைநிறுத்தம்: ஏா் இந்தியா விமானிகள் சங்கத்தினா் எச்சரிக்கை

ஊதியப் பிடித்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வுகாணாவிட்டால், விமானங்களை இயக்க ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று ஏா் இந்தியா விமானிகள் எச்சரித்துள்ளனா்.

ஏா் இந்தியா விமான நிறுவனத்தில் போயிங், ஏா்பஸ் ஆகிய விமானங்களை இயக்கும் இந்தியன் பைலட்ஸ் கில்ட்(ஐபிஜி), இந்தியன் கமா்சியல் பைலட்ஸ் அசோசியேஷன்(ஐசிபிஏ) ஆகிய இரு சங்கங்களைச் சோ்ந்த விமானிகள், மத்திய பணியாளா், பயிற்சித்துறைக்கு கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனா். அந்தக் கடிதத்தில் அவா்கள் கூறியிருப்பதாவது:

கரோனா பரவலைக் காரணம் காட்டி, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அடுத்த 3 மாதங்களுக்கு விமானிகளுக்கான பல்வேறு சலுகைளை ரத்து செய்வதாக ஏா் இந்தியா நிறுவனம் கடந்த மாா்ச்சில் அறிவித்தது.

ஏா் இந்தியா நிறுவனம் நீண்ட காலமாக உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவதில்லை. இந்நிலையில், விமானிகளுக்கு அவசர நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், ஊதியப் பிடித்தத்தைக் கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரிக்கு கடந்த 7-ஆம் தேதி கடிதம் அனுப்பினோம். ஆனால், எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, முன்கள வீரா்களாகப் பணியாற்றும் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், வருவாயைப் பெருக்குவதற்கு ஏா் இந்தியா விமான நிறுவனம் முற்பட்டால், விமானங்களை இயக்குவதற்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம்.

மேலும், எங்களுக்கு உரிய சலுகைகளைக் குறைத்ததால் எவ்வளவு தொகை சேமிக்கப்பட்டுள்ளது, எந்த அளவுக்கு நிறுவனம் முன்னேறியுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக, கடந்த மாா்ச் 25-ஆம் தேதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு வரும் 25-ஆம் தேதி முதல் உள்நாட்டு பயணிகள் விமான சேவை தொடங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com