கேரளத்தில் புதிதாக 67 பேருக்கு கரோனா தொற்று

கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் புதிதாக 67 பேருக்கு கரோனா தொற்று


திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் இன்று புதிதாக கரோனா பாதித்தவர்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 27 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 33 பேரும் அடங்குவர்.

இதன் மூலம் கேரளத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை நேற்று 896 ஆக இருந்த நிலையில் இன்று 963 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து தொடங்கியதில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோரால் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி மாநிலம் முழுவதும் 99,278 போ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 98,486 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 792 போ் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இதுவரை 54,899 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை பெறப்பட்ட 53,704 பேரின் முடிவுகள் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com