விற்பனையாளர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் அமேசான் நிறுவனம்!

அமேசான் நிறுவனம் அதன் கீழ் இயங்கும் விற்பனையாளர்களுக்கு இலவச சுகாதார காப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.
விற்பனையாளர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் அமேசான் நிறுவனம்!

அமேசான் நிறுவனம் அதன் கீழ் இயங்கும் விற்பனையாளர்களுக்கு இலவச சுகாதார காப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள அதன் விற்பனையாளர்கள்  அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இந்த மருத்துவக் காப்பீடு மூலமாக லட்சக்கணக்கான விற்பனையாளர்கள் பயன்பெறுவர் என்று நிறுவனத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ரூ.50,000 வரையில் சிகிச்சை செலவுகளை பெற இது உதவும். மேலும் இது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், ஜனவரி 2019 முதல் நேற்று வரை அமேசான் கீழ் உள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் இது பொருந்தும். ஊரடங்கு காரணமாக தற்போது பயன்பாட்டில் இல்லாத விற்பனையாளர்களுக்கும் வழங்கப்படும். இதனால், விற்பனையாளர்களுக்கு தங்களின் பாதுகாப்பு குறித்த கவலை குறைவதோடு,  வணிகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த முடியும் என்று கூறும் நிறுவனம், விற்பனையாளர்களுக்கு மேலும் சில சலுகைகளை வழங்க ஆலோசித்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com