புலம்பெயர் தொழிலாளர்களை விமானத்தில் சொந்த ஊர் அனுப்பிய தில்லி விவசாயி

தன்னிடம் பணியாற்றிய 10 புலம்பெயர் தொழிலாளர்களை விமானத்தில் டிக்கெட் எடுத்து சொந்த மாநிலமான பிகாருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் தில்லி விவசாயி.
புலம்பெயர் தொழிலாளர்களை விமானத்தில் சொந்த ஊர் அனுப்பிய தில்லி விவசாயி


தன்னிடம் பணியாற்றிய 10 புலம்பெயர் தொழிலாளர்களை விமானத்தில் டிக்கெட் எடுத்து சொந்த மாநிலமான பிகாருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் தில்லி விவசாயி.

பப்பன் கெஹ்லோட் என்ற மஷ்ரூம் பண்ணை விவசாயி, அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் விமானத்தில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பிவைத்துள்ளார். 

இது பற்றி அவரது சகோதரர் நிரஞ்சன் கூறுகையில், முதலில் இவர்களுக்கு ரயிலில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து பிகாருக்கு அனுப்பி வைக்கவே திட்டமிட்டோம். ஆனால் எங்களால் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியவில்ல. அப்போதுதான் எங்களுக்கு இந்த திட்டம் தோன்றியது. எங்களுடன் சுமார் 20 ஆண்டு காலம் பணியாற்றியவர்கள். இவர்களது பாதுகாப்பு முக்கியம் என்று தோன்றியதால், விமானத்தில் செல்ல டிக்கெட் எடுத்துக் கொடுத்தோம். அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து கொடுத்து சொந்த் ஊருக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்கிறார்.

இது பற்றி சொந்த ஊருக்கு விமானத்தில் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் கூறுகையில், நாங்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை விமானத்தில் செல்வோம் என்று, எங்கள் முதலாளி எங்களுக்காக இதை செய்து கொடுத்திருக்கிறார். 

இன்று காலை 6 மணிக்கு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாட்னா செல்லும் விமானத்தில் இவர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

சொந்த ஊர் செல்கிறோம்.. நடந்தோ, சைக்கிள் மிதித்துக் கொண்டோ அல்ல.. ரயிலிலோ பேருந்திலோ கூட இல்லை. விமானத்தில் செல்கிறோம். இதை நம்பவே முடியவில்லை என்கிறார்கள் தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொண்டு.

இது பற்றி தொழிலாளர் ராம் (50) கூறுகையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் எங்கள் உணவு மற்றும் தங்குமிட வசதிகள் அனைத்தையும்கெஹ்லோட் பார்த்துக் கொண்டார். அவரிடம் 27 ஆண்டு காலம் பணியாற்றி வருகிறோம் என்கிறார்.

தில்லியின் திகிபுர் கிராமத்தைச் சேர்ந்தகெஹ்லோட், சுமார் 68 ஆயிரம் ரூபாய் செலவிட்டு விமான டிக்கெட் எடுத்ததோடு, தொழிலாளர்களின் கையில் தலா ரூ.3 ஆயிரத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com