விமானிக்கு கரோனா தொற்று: பாதி வழியிலேயே இந்தியா திரும்பிய ஏர் இந்தியா விமானம்

ரஷ்யாவில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக சென்ற ஏர் இந்தியா விமானத்தில் விமானிக்கு கரோனா தொற்று இருந்ததால் அந்த விமானம் பாதி வழியிலேயே இந்தியா திரும்பியது. 
விமானிக்கு கரோனா தொற்று: பாதி வழியிலேயே இந்தியா திரும்பிய ஏர் இந்தியா விமானம்

ரஷ்யாவில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக சென்ற ஏர் இந்தியா விமானத்தில் விமானிக்கு கரோனா தொற்று இருந்ததால் அந்த விமானம் பாதி வழியிலேயே இந்தியா திரும்பியது. 

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதுமாக பொது முடக்கம் கடந்த மாா்ச் மாதம் முதல் அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி சா்வதேச விமானப் போக்குவரத்துக்கு இந்தியா தடை விதித்ததால், பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு சென்றிருந்தவா்கள் நாடு திரும்ப இயலாமல் அங்கேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து ‘வந்தே பாரத்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் அவா்களை மீட்டு வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக தில்லியில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் நேற்று இரவு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் உஸ்பெகிஸ்தான் வான்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது விமானி ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து பாதி வழியிலேயே இரவு 12.30 மணிக்கு விமானம் மீண்டும் தில்லி திரும்பியுது.

இதையடுத்து அந்த விமானத்தில் பயணித்த விமானி உட்பட அனைத்து ஏர் இந்தியா ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தில்லியில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்பாக அந்த விமானிக்கு கரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், மருத்துவ பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த குழு, பாசிட்டிவ் என்பதற்கு பதிலாக நெகட்டிவ் என தவறுதலாக படித்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து மாஸ்கோவில் உள்ள இந்தியர்களை அழைத்துவர மற்றொரு விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்தது. மேலும், இதுகுறித்து விரிவான விசாரணைக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com