கரோனா போரில் இந்தியா வெற்றி பெற மக்களின் ஒத்துழைப்பே காரணம்: பிரதமர் மோடி

கரோனா போரில் இந்தியா வெற்றி பெற மக்களின் ஒத்துழைப்பே மிக முக்கிய காரணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
கரோனா போரில் இந்தியா வெற்றி பெற மக்களின் ஒத்துழைப்பே காரணம்: பிரதமர் மோடி

கரோனா போரில் இந்தியா வெற்றி பெற மக்களின் ஒத்துழைப்பே மிக முக்கிய காரணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமா் மோடி, ‘மனதின் குரல்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது: 

நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கரோனா தொற்றுக்கு எதிரான போரில் உறுதியுடன் செயல்பட்டதால் இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்புகளும் உயிரிழப்புகளும் வெகுவாக குறைந்துள்ளன. கரோனா போரில் இந்தியா வெற்றி பெற மக்களின் ஒத்துழைப்பே மிக முக்கியக் காரணம். இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதை உலகமே உற்று நோக்கியுள்ளது

உயிரிழப்புகள் குறைந்ததற்கும் நோய் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கும் மருத்துவப் பணியாளர்கள் ஆற்றிய பணி மிகவும் பாராட்டத்தக்கது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகளின் பங்கும் மகத்தானது. 

கடந்த மாதம் மனதின் குரல் பகிர்வின் போது பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது நிலைமை படிப்படியாக சீரடையத் தொடங்கியுள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் செயல்படத் துவங்கியுள்ளன. இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

அதே நேரத்தில் 6 அடி சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடியுங்கள். முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்த்திடுங்கள். தனிமனித இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே தொடர்ந்து கரோனாவில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com