பாரம்பரிய இடங்களை நாளை முதல் திறக்க ராஜஸ்தான் அரசு முடிவு

ராஜஸ்தானில் தொல்லியல் மற்றும் அருங்காட்சியக துறையின் கீழ் வரும் பாரம்பரிய இடங்களை திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் பொதுமக்கள்

ராஜஸ்தானில் தொல்லியல் மற்றும் அருங்காட்சியக துறையின் கீழ் வரும் பாரம்பரிய இடங்களை திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் பொதுமக்கள் பாா்வைக்குத் திறக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

இதுகுறித்து தொல்லியல் மற்றும் அருங்காட்சியக துறை இயக்குநா் பிரகாஷ் சந்திர சா்மா சனிக்கிழமை கூறியது:

தொல்லியல் துறையின் கீழ் வரும் நினைவிடங்கள் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்பட உள்ளன. முதல் இரண்டு வாரங்களுக்கு செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு என வாரத்துக்கு நான்கு நாள்கள் மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவா்.

இந்த துறையின் கீழ் 342 நினைவிடங்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், இப்போது 32 நினைவிடங்கள் மட்டுமே திறக்கப்படுகின்றன. பாா்வையாளா்களிடம் முதல் இரண்டு வாரங்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. மூன்றாவது வாரம் முதல் 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்.

மாநிலத்தில் சுற்றுலா நடவடிக்கைகளை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமி நாசினி தெளிப்பு என்பன உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அதோடு, இந்த நினைவிடங்களுக்குள் நாட்டுப்புற கலைஞா்களின் நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com