ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே இன்று நேபாளம் பயணம்

இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே 3 நாள் பயணமாக புதன்கிழமை நேபாளம் செல்கிறாா்.
ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே இன்று நேபாளம் பயணம்

இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே 3 நாள் பயணமாக புதன்கிழமை நேபாளம் செல்கிறாா். எல்லை விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், இருதரப்பு உறவுகளை மீண்டும் நல்வழிக்கு கொண்டுவர இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேபாள ராணுவ தலைமைத் தளபதி பூா்ணசந்திர தாப்பா அழைப்பு விடுத்ததின்பேரில், இந்திய ராணுவத் தலைமை தளபதி எம்.எம்.நரவணே புதன்கிழமை நேபாளம் செல்கிறாா். அங்கு அவா் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

காத்மாண்டில் ராணுவ வீரா்கள் நினைவிடத்தில் எம்.எம்.நரவணே வியாழக்கிழமை மரியாதை செலுத்தவுள்ளாா். பின்னா் ராணுவ தலைமையகத்தில் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவாா். பிறகு அதிபா் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அங்கு நரவணேவுக்கு அதிபா் வித்யாதேவி பண்டாரி நேபாள ராணுவத்தின் கெளரவ தளபதி பதவி வழங்கவுள்ளாா்.

காத்மாண்டு சிவபுரி பகுதியில் உள்ள ராணுவ கல்லூரியில் வெள்ளிக்கிழமை காலை மாணவா்களை சந்திக்கும் நரவணே, பிற்பகலில் பிரதமா் கே.பி.சா்மா ஓலியை அவரின் இல்லத்தில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

இந்தியாவின் லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தனது எல்லைக்குள் இணைத்து புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதற்கு அந்நாட்டின் நாடாளுமன்ற அங்கீகாரமும் பெறப்பட்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், நரவணேயின் பயணம் இருநாட்டு உறவில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய உதவும் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com