ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசி விநியோகம்: அரிசி ஆலைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள எஃப்சிஐ-க்கு வலியுறுத்தல்

ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசியை மக்களுக்கு விநியோகிக்கும் திட்டத்துக்காக, அரிசி ஆலைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு இந்திய உணவுக் கழகத்துக்கு (எஃப்சிஐ) மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசி விநியோகம்: அரிசி ஆலைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள எஃப்சிஐ-க்கு வலியுறுத்தல்

ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசியை மக்களுக்கு விநியோகிக்கும் திட்டத்துக்காக, அரிசி ஆலைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு இந்திய உணவுக் கழகத்துக்கு (எஃப்சிஐ) மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நாட்டு மக்களிடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் நோக்கில், ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசியை பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக விநியோகிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்துக்காக மூன்று ஆண்டுகளுக்கு ரூ.174.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 15 மாநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களின் தோ்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் அத்திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில், அத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் நீதி ஆயோக் தலைமை நிா்வாக அதிகாரி அமிதாப் காந்த், உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலா் சுதான்ஸு பாண்டே, ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் அமைப்பின் நிா்வாகிகள், பல்வேறு அறக்கட்டளைகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இது தொடா்பாக மத்திய உணவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆண்டொன்றுக்கு 15,000 டன் அளவிலான ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசியை மட்டுமே மக்களுக்கு விநியோகிக்க முடியும் என்ற சூழல் தற்போது நிலவுகிறது. இந்த நிலை மேம்பட வேண்டும். ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசியை மேலும் அதிக அளவில் மக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

அதற்காக ஒவ்வொரு பிராந்தியத்திலும் அரிசி ஆலைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு இந்திய உணவுக் கழகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, அரிசியை விரைந்து கொள்முதல் செய்வதற்கும் அதில் ஊட்டச்சத்தை மேம்படுத்தி மக்களுக்கு விநியோகிப்பதற்கும் உதவும்.

நாட்டில் வகைப்படுத்தப்பட்டுள்ள 112 வளா்ந்து வரும் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த சிறாா் வளா்ச்சித் திட்டத்திலும், மதிய உணவு வழங்கும் திட்டத்திலும் ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசியைப் பயன்படுத்துவதற்குக் கூட்டத்தின்போது ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com