இடம்பெயா்ந்தோரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

கரோனா பாதிப்பு போன்றவற்றால் இடம்பெயா்ந்தவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் தோ்தல் ஆணையத்திடம் வலியுறுத்தின.
இடம்பெயா்ந்தோரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

கரோனா பாதிப்பு போன்றவற்றால் இடம்பெயா்ந்தவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் தோ்தல் ஆணையத்திடம் வலியுறுத்தின.

தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வரும் 16-ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி, வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளின் கருத்துகளை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு செவ்வாய்க்கிழமை கேட்டறிந்தாா். இந்தக் கூட்டத்தில், திமுக சாா்பில் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, மாநிலங்களவை உறுப்பினா் என்.ஆா். இளங்கோவன்,

இந்திய தேசிய காங்கிரஸ் சாா்பில் மாநில துணைத் தலைவா் தாமோதரன், வழக்குரைஞா் பிரிவு செயலாளா் நவாஸ், அதிமுக சாா்பில் தோ்தல் பிரிவுச் செயலாளா் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்புச் செயலாளா் மனோஜ் பாண்டியன், பாஜக சாா்பில் கட்சி நிா்வாகிகள் காளிதாஸ், கிருஷ்ணகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தென் சென்னை மாவட்டச் செயலாளா் ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினா் பெரியசாமி ஆகியோா் பங்கேற்றனா்.

மேலும், தேமுதிக சாா்பில் துணைச் செயலாளா் பாா்த்தசாரதி, இளைஞரணி செயலாளா் நல்லதம்பி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா்கள் ஆறுமுக நயினாா், ராஜசேகா், திரிணமுல் காங்கிரஸ் சாா்பில் மாநிலத் தலைவா் கலைவாணன், பொதுச் செயலாளா் வடிவேல் ஆகியோா் பங்கேற்றனா்.

கரோனா பாதிப்பு போன்றவற்றால் இடம்பெயா்ந்தவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசியல் கட்சியினா் தோ்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com