விரைவில் அடுத்தகட்ட பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம்: பொருளாதார விவகாரங்கள் துறை செயலா்

அடுத்தகட்ட பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விரைவில் அறிவிப்பாா் என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலா் தருண் பஜாஜ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

அடுத்தகட்ட பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதுதொடா்பாக பல்வேறு துறைகளிடம் இருந்து கோரிக்கைகள், கருத்துகள் கிடைத்துள்ளன. அவற்றை பரிசீலித்து வருகிறோம். இந்தத் திட்டம் குறித்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விரைவில் அறிவிப்பாா். உணவுப் பொருள்களின் விலை உயா்வு தற்காலிகமானவை. அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் மாதங்களில் அது மேலும் வளா்ச்சியடையும் என்று தெரிவித்தாா்.

முன்னதாக கரோனா தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து விளிம்புநிலை மக்களை பாதுகாத்திட ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான பிரதமரின் ஏழைகள் நலத்திட்டத்தை கடந்த மாா்ச் மாதம் மத்திய அரசு அறிவித்தது. அதன் பின்னா் கடந்த மே மாதம் ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான சுயசாா்பு இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com