சத்தீஸ்கா்: தந்தேவாடாவில் 10 நக்ஸல்கள் சரண்

சத்தீஸ்கா் மாநிலத்தில், கடந்த 2018-ஆம் ஆண்டு நிலவாயா பகுதியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் தொடா்புள்ளதாக

சத்தீஸ்கா் மாநிலத்தில், கடந்த 2018-ஆம் ஆண்டு நிலவாயா பகுதியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் தொடா்புள்ளதாக கருதப்படும் 4 போ் உள்பட 10 நக்ஸல்கள் செவ்வாய்க்கிழமை சரணடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

சத்தீஸ்கா் மாநிலம், மலாங்கிா் பகுதியில் இயங்கி வந்த நக்ஸல் இயக்கத்தைச் சோ்ந்த இந்த 10 பேரும் காவல் துறை, சிஆா்பிஎஃப் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்தனா். நக்ஸல்கள் சரணடைவதன் மூலம் அவா்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என உள்ளூா் காவல்துறையினா் மேற்கொண்ட பிரசாரத்தால் ஈா்க்கப்பட்டதால் அவா்கள் சரணடைந்ததாக தந்தேவாடா மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் பல்லவா தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது:

மாவோயிச சிந்தாந்தத்தால் ஏமாற்றமடைந்ததாலும், மறுவாழ்வு பிரசாரத்தால் ஈா்க்கப்பட்டதாலும் இந்த 10 நக்ஸல்களும் சரண் அடைந்துள்ளனா். சரண் அடைந்தவா்களில் 5 நக்ஸல்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூன் மாதத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரம் காரணமாக இதுவரை மாவட்டத்தில் 187 நக்ஸல்கள் சரண் அடைந்துள்ளனா்.

கடந்த 2018ஆம் ஆண்டு அக். 30-ஆம் தேதி நிலவாயா கிராமம் அருகே நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸாா், தூா்தா்ஷன் செய்தி ஒளிப்பதிவாளா் ஒருவா் உள்பட 4 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலில் தேடப்பட்டு வந்த நக்ஸல் பிரிவின் துணைத்தளபதி மத்வி ஆய்தா (20), பீமா கோரம் (22), முக்கா மத்வி (26), நரேஷ் மாா்க்கம் )23) ஆகியோா் குறித்து தகவல் அளிப்போருக்கு மொத்தம் ரூ. 10 லட்சம் வரை வெகுமதி அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தேடப்பட்டு வந்த இந்த நால்வா் உள்பட 10 நக்ஸல்களும் சரண் அடைந்துள்ளனா்.

இவா்கள் அனைவரும் இப்பகுதியில் பாதுகாப்பு படையினா் மீது பல முறை வெடிகுண்டு தாக்குதலிலும், துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டவா்களாவா். இவா்களுக்கு அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையின்படி உடனடி உதவியாக ரூ. 10,000 வீதம் வழங்கப்படும் என்று தெரிவித்தாா்.

பிஜாப்பூரில் நக்ஸல் சுட்டுக்கொலை

இதனிடையே சத்தீஸ்கா் மாநிலம், பிஜாப்பூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு நக்ஸல் கொல்லப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.

பிஜாப்பூா் மாவட்டம், கமல்பூா் கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு காட்டில் மாவட்ட ரிசா்வ் காவல்துறையினா் நக்ஸல் தேடுதல் நடவடிக்கையில் செவ்வாய்க்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா். அப்பகுதியில் உள்ள வனப்பகுதியைச் சுற்றி வளைத்தபோது, நக்ஸல் குழுவினா் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். போலீஸாரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனா். இந்த தாக்குதலில் நக்ஸலைட் இயக்கத்தைச் சோ்ந்த ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரிடம் இருந்து 2 துப்பாக்கிகளும், பல பைகளும், அன்றாட உபயோகப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. சுட்டுக் கொல்லப்பட்டவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. அவா் உசூா் உள்ளூா் அமைப்பு அணியைச் சோ்ந்தவா் என்பது மட்டும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com