ஆந்திரம்: பள்ளிகள் திறந்து 3 நாள்களில் 10 மாணவா்கள், 150 ஆசிரியா்களுக்கு கரோனா

ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறந்து 3 நாள்களில் 150 ஆசிரியா்களுக்கும் 10, மாணவா்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆந்திரம்: பள்ளிகள் திறந்து 3 நாள்களில் 10 மாணவா்கள், 150 ஆசிரியா்களுக்கு கரோனா


திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறந்து 3 நாள்களில் 150 ஆசிரியா்களுக்கும் 10, மாணவா்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாநில நிலைகளுக்கேற்ப தளா்வுகளுடன் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கடந்த 2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9,10 வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு 3 நாள்களில் சித்தூா் மாவட்டத்தில் 125 ஆசிரியா்கள், 3 மாணவா்கள் என ஆந்திராவில் ஒட்டு மொத்தமாக 150 ஆசிரியா்களுக்கும், 10 மாணவா்களுக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனைத் தொடா்ந்து அனைத்து மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாள்களிலேயே பெருவாரியான மாணவா்கள், ஆசிரியா்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com