மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் சிக்கிம் மாநில முதல்வர் சந்திப்பு

மத்திய வடகிழக்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் ஜிதேந்திர சிங்கை, சிக்கிம் மாநில முதலவர் பிரேம் சிங் தமாங் சந்தித்துப் பேசினார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் சிக்கிம் மாநில முதல்வர் சந்திப்பு

மத்திய வடகிழக்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் ஜிதேந்திர சிங்கை, சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் சந்தித்துப் பேசினார்.
தில்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது சிக்கிம் மாநிலத்தில், மத்திய அரசு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன், முதல்வர் பிரேம் சிங் தமாங் ஆலோசனை மேற்கொண்டார். 
சிக்கிம் மாநிலத்தில் கொவைட் 19 சூழல் குறித்தும், மழை, வெள்ளப் பாதிப்புகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்தும் தினந்தோறும் அக்கறையுடன் விசாரித்து நடவடிக்கைகள் எடுப்பதற்கும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அரைமணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் இரண்டு திட்டங்கள் குறித்து மனு அளித்தார். சிக்கிம் மாநிலத்தின் சகுங் மாவட்டம், மத்திய அரசின் உயர் சமூக அந்தஸ்து கொண்ட மாவட்டமாக, மாற்றம் பெறும் பட்டியலில் இருப்பது குறித்தும் மத்திய அமைச்சரிடம் அவர் எடுத்துக் கூறினார். 
இப்போது சிக்கிம் மாநிலத்துக்கு அதிக அளவு சுற்றுலாப்பயணிகள் வருவதாகவும், தொடர்ந்து கொவைட் தொற்று பரவல் இருப்பதாகவும் பருவகாலத்திலும் தொடர்வதாகவும் அவர் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம், சிக்கிம் முதல்வர் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com