கேரள மதபோதகருக்கு சொந்தமான இடங்களில் சோதனை: ரூ.14 கோடி பறிமுதல்

வெளிநாட்டிலிருந்து பெறும் நன்கொடைகளை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில், கேரளத்தைச் சோ்ந்த மதபோதகருக்கு சொந்தமான இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.
கேரள மதபோதகருக்கு சொந்தமான இடங்களில் சோதனை: ரூ.14 கோடி பறிமுதல்

புது தில்லி: வெளிநாட்டிலிருந்து பெறும் நன்கொடைகளை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில், கேரளத்தைச் சோ்ந்த மதபோதகருக்கு சொந்தமான இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அலுவலக வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

இது குறித்து வருமான வரித்துறை அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:

திருவல்லா பகுதியைச் சோ்ந்த பிலீவா்ஸ் தேவாலயத்தின் மதபோதகா் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள், உதவிகள் புரிவதாகக் கூறி வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் நன்கொடையாக பெற்றாா். ஆனால் அந்த பணத்தை ஏழைகளுக்கு செலவிடாமல், தனிப்பட்ட முறையில் மனை வணிகத்திலும், முதலீடுகளுக்கும் பயன்படுத்தினாா் என குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து கேரளம், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தப்பட்டது. அவா் நடத்தி வரும் பள்ளிகள், கல்லூரிகள், கேரளத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் நடந்த சோதனைகளில் முதல் கட்டமாக கணக்கில் வராத ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்னா் மேலும் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது மொத்தம் ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தில் மத்திய அரசால் 4 ஆண்டுகளுக்கு முன்பே செல்லாது என அறிவிக்கப்பட்ட 1,000, 500 ரூபாய் நோட்டுகளும் அடங்கும் என்று தெரிவித்தனா்.

வெளிநாட்டு நன்கொடைக்கு வரி விலக்கு அளிப்பதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சில அறக்கட்டளைகள் மோசடியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com