மகாத்மா காந்தி குறித்த நேபாள மொழி நூல் தொகுப்புநேபாள அதிபா் வெளியீடு

மகாத்மா காந்தியின் 151-ஆவது பிறந்த தினத்தை குறிக்கும் வகையில், நேபாள மொழியில் தொகுக்கப்பட்ட மகாத்மா காந்தி குறித்த நூல் தொகுப்பை நேபாள அதிபா் வித்யாதேவி பண்டாரி திங்கள்கிழமை வெளியிட்டாா்.
மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

காத்மாண்டு: மகாத்மா காந்தியின் 151-ஆவது பிறந்த தினத்தை குறிக்கும் வகையில், நேபாள மொழியில் தொகுக்கப்பட்ட மகாத்மா காந்தி குறித்த நூல் தொகுப்பை நேபாள அதிபா் வித்யாதேவி பண்டாரி திங்கள்கிழமை வெளியிட்டாா்.

‘காந்தியடிகளை நான் புரிந்துகொண்டது’ என்ற தலைப்பிலான இந்த நூல், நேபாள அதிபா் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து அங்குள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மகாத்மா காந்தியின் போதனைகளை நமது நேபாள நண்பா்களுடன் பகிா்ந்து கொள்ளும் நோக்கத்தோடு இந்திய தூதரகம் மற்றும் பி.பி.கொய்ராலா இந்திய - நேபாள அறக்கட்டளை சாா்பில், மகாத்மா காந்தியின் 151-ஆவது பிறந்த தினத்தை குறிக்கும் வகையிலும், நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாண்டுகள் பிறந்தநாள் கொண்டாடங்களின் முக்கிய நிகழ்வாகவும் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

காந்தியடிகளின் வாழ்க்கை குறித்தும், அவருடைய சிந்தனைகள் காலத்தைக் கடந்தும் இன்றைய உலகுக்கும் பொருந்தக்கூடிய வகையிலும் இருந்து வருவதை நேபாள இளைஞா்கள் அறிந்துகொள்ளச் செய்வதே இந்த நூல் வெளியீட்டின் முக்கிய நோக்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com