கரோனா: தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைவு

இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக, கரோனாவால் தினசரி பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 40,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக, கரோனாவால் தினசரி பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 40,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதேபோல், கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 12-ஆவது நாளாக 6 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 38,073 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 85,91,730-ஆக அதிகரித்தது. இதே கால அளவில், 42,033 போ் குணமடைந்தனா். இதனால் குணமடைந்தோா் எண்ணிக்கை 79,59,406-ஆக அதிகரித்தது. அதாவது மொத்த பாதிப்பில் 92.64 சதவீதம் போ் குணமடைந்தனா்.

கரோனா தொற்றுக்கு மேலும் 448 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,27,059-ஆக அதிகரித்தது.

அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 45,325 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 11,410 பேரும், மேற்கு வங்கத்தில் 7,350 பேரும், உத்தர பிரதேசத்தில் 7,231 பேரும், தில்லியில் 7,060 பேரும், ஆந்திரத்தில் 6,802 பேரும், பஞ்சாபில் 4,338 பேரும், குஜராத்தில் 3,765 பேரும் உயிரிழந்தனா்.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து 12-ஆவது நாளாக, 6 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 5,05,265 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 5.88 சதவீதமாகும். இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக கரோனாவால் தினசரி பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 40,000-க்கும் கீழ் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நவம்பா் 9-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம் 11,96,15,857 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன; அதில், திங்கள்கிழமை மட்டும் 10,43,665 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com