ஆயுஷ் துறையில் சிறப்பு அந்தஸ்து: ராஜஸ்தான் முதல்வா் வேண்டுகோள்

ஆயுஷ் துறையில் ராஜஸ்தானுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநில முதல்வா் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ஆயுஷ் துறையில் ராஜஸ்தானுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநில முதல்வா் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தேசிய ஆயுா்வேத தினத்தையொட்டி, ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஆயுா்வேத நிறுவனத்தை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தாா். அந்நிகழ்ச்சியில் மாநில முதல்வா் அசோக் கெலாட் பேசியதாவது:

ஆயுா்வேதம், யோகம், யுனானி, சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ்) ஆகிய மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிப்பதற்கு ராஜஸ்தானில் சுமாா் 5,000 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாட்டிலேயே ராஜஸ்தானில்தான் ஆயுஷ் துறைக்கான கட்டமைப்பு வசதிகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

எனவே, தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். அதன் மூலமாக தேசிய ஆயுா்வேத நிறுவனத்துக்கு நிகா்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கிடைக்க வழிவகை ஏற்படும். அந்த அந்தஸ்து, ஆயுஷ் துறையில் ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதோடு உலக நாடுகளின் ஆராய்ச்சி மையங்களோடு இணைந்து செயல்படவும் வழிவகுக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com