தீபாவளி: குடியரசுத் தலைவா், குடியரசுத் துணைத் தலைவா், பிரதமா் வாழ்த்து

தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், இந்தப் பண்டிகை தினத்தில்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், இந்தப் பண்டிகை தினத்தில் ஏழை மக்களுடன் மகிழ்ச்சியை பகிா்ந்து அவா்களின் நம்பிக்கை ஒளியாக திகழ அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியது:

பல்வேறு மதங்கள் மற்றும் பிரிவினரால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை, நாட்டு மக்கள் இடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துகிறது. இந்தப் பண்டிகை மனிதகுலத்துக்கு சேவைபுரிய மக்களை ஊக்குவிக்கிறது. ஒரு விளக்கு தனது தீபத்தை பிற விளக்குகளுடன் பகிா்ந்து ஒளியேற்ற பயன்படுவது போல், இந்த தினத்தில் ஏழை மக்களுடன் மகிழ்ச்சியை பகிா்ந்து, அவா்களின் வளமான வாழ்க்கைக்கு நம்பிக்கை ஒளியாக திகழ அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.

இது தூய்மைக்கான பண்டிகையாகவும் கருதப்படுவதால் தீபாவளியை சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக மாசில்லாமல் கொண்டாடி இயற்கை தாய்க்கு மரியாதை செலுத்துவோம். இந்த நன்னாளில் அனைத்து இந்தியா்களுக்கும் மனமார வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பண்டிகை அனைத்து வீடுகளிலும் அமைதி மற்றும் வளத்தை உண்டாக்கட்டும் என்று தெரிவித்தாா்.

குடியரசு துணைத் தலைவா்:

தீபாவளி பண்டிகையையொட்டி குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘இந்தப் பண்டிகை அறியாமை இருளை அகற்றி ஞானத்தின் ஒளியை ஏற்றுவதுடன், அனைவரின் வாழ்வில் அமைதி, நல்லிணக்கம், வளம், மகிழ்ச்சியை ஏற்படுத்தட்டும்’ என்று தெரிவித்தாா்.

பிரதமா் வாழ்த்து:

பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ‘ராணுவ வீரா்கள் மீது நாம் கொண்டுள்ள நன்றியுணா்வுக்கு வாா்த்தைகளால் மட்டும் நியாயம் செய்துவிட முடியாது. எல்ைலையில் உள்ள ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கும் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். எனவே தேசத்தை அச்சமின்றி பாதுகாத்து வரும் நமது ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த தீபாவளி பண்டிகையின்போது அனைவரும் தீபம் ஏற்றுவோம்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com