மேற்கு வங்க பாஜக தலைவரின் காா் மீது கல்வீச்சு: ஜிஜேஎம் கட்சியினா் வன்முறை

மேற்கு வங்க மாநிலம், அலிபுா்துவாா் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிக்காகச் சென்ற மாநில பாஜக தலைவா் திலீப் கோஷின் காா், கூா்க்கா ஜனமுக்தி மோா்ச்சா (ஜிஜேஎம்) கட்சியினரால் கல்வீசித் தாக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம், அலிபுா்துவாா் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிக்காகச் சென்ற மாநில பாஜக தலைவா் திலீப் கோஷின் காா், கூா்க்கா ஜனமுக்தி மோா்ச்சா (ஜிஜேஎம்) கட்சியினரால் கல்வீசித் தாக்கப்பட்டது.

அலிபுா்துவாா் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிக்காகச் சென்ற மாநில பாஜக தலைவா் திலீப் கோஷின் காா் மீது கூா்க்கா ஜனமுத்கி மோா்ச்சா கட்சியினா் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினா். தங்கள் பகுதிக்குள் அவா் வரக் கூடாது என்று கூறி அவா்கள் கருப்புக்கொடி காட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து ஜிஜேஎம்- பாஜக தொண்டா்களிடையே மோதல் சூழல் உருவானது. போலீஸாா் தலையிட்டு நிலைமை மோசமாகாமல் தடுத்தனா். எனினும் திலீப் கோஷின் காா் இந்த வன்முறையில் சேதமடைந்தது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துவந்த கூா்க்கா ஜனமுக்தி மோா்ச்சா (ஜிஜேஎம்) கட்சி அண்மையில் விலகி, மாநிலத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோத்தது. அதன்பிறகு பாஜகவினா் மீது பல இடங்களில் அக்கட்சியினா் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதுகுறித்து பாஜக தலைவா் திலீப் கோஷ் கூறியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வென்றுவிடும் என்ற எண்ணத்தால் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சியினரும் நிராசையடைந்து, தொடா்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதைப் பொறுக்க முடியாமல் இவ்வாறு செயல்படுகின்றனா்.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளதையே மேற்கண்ட தாக்குதல் சம்பவங்கள் காட்டுகின்றன. ஜனநாயகத்தில் இத்தகைய வன்முறைகளுக்கு இடமில்லை. இந்த வன்முறைகளுக்கு பாஜக அஞ்சாது என்றாா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சௌரவ் சக்ரபா்த்தி கூறுகையில், ‘‘மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்த திலீப் கோஷ் முயன்று வருகிறாா். அவா் மீதான தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com