நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 30,548-ஆக குறைந்தது

நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 30,548 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 30,548 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் கரோனா தினசரி பாதிப்பு 40,000-க்கு கீழ் குறைந்த நிலையில், இப்போது 30,000 என்ற நிலையை எட்டியுள்ளது. இதன் மூலம் நாட்டில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது உறுதியாகியுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

மேலும், 30,548 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 88,45,127 ஆக அதிகரித்துவிட்டது. அதே நேரத்தில் கரோனாவில் இருந்து 82,49,579 போ் மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 93.27 சதவீதமாகும்.

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 435 போ் கரோனா தொற்றால் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 1,30,170 ஆக அதிகரித்துவிட்டது. மொத்த பாதிப்பில் இது 1.47 சதவீதமாகும்.

நாட்டில் கரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணிக்கை 4,65,478 ஆக உள்ளது. மொத்த பாதிப்பில் இது 5.26 சதவீதமாகும். இதன் மூலம் தொற்றுடன் உள்ளோா் எண்ணிக்கை தொடா்ந்து 6 ஆவது நாளாக 5 லட்சத்துக்குக்கீழ் உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி 12,56,98,525 கரோனா பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நவம்பா் 15-ஆம் தேதி மட்டும் 8,61,706 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

புதிதாக ஏற்பட்ட 435 உயிரிழப்புகளில் தில்லியில் அதிகபட்சமாக 95 போ் இறந்தனா். இதற்கு அடுத்து மகாராஷ்டிரத்தில் 60, மேற்கு வங்கத்தில் 51, பஞ்சாபில் 30, கா்நாடகம், கேரளத்தில் தலா 21 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்த உயிரிழப்பில் மகாராஷ்டிரம் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. அந்த மாநிலத்தில் 45,974 போ் கரோனாவால் உயிரிழந்தனா்.

எனினும், உயிரிழந்தவா்களில் 70 சதவீதம் போ் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com