ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனுடன் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் உரையாடினார். 
ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்


புது தில்லி: அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனுடன் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் உரையாடினார். 
இதுகுறித்து பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டதாவது: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தேன். அப்போது இந்தியா-அமெரிக்கா இடையே நல்லுறவு நிலவ இருவரும் உறுதியேற்றோம். மேலும் இருநாடுகளின் முன்னுரிமை விவகாரங்களான கரோனா தொற்று, பருவநிலை மாற்றம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்தும் கலந்துரையாடினோம் என்று தெரிவித்தார். 
அவர் வெளியிட்ட மற்றொரு சுட்டுரைப் பதிவில், அமெரிக்க துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸýக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில் இந்திய-அமெரிக்க உறவின் மிகப் பெரிய பலமாக இருக்கும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக கமலா ஹாரிஸ் திகழ்வதாகவும், அவரின் வெற்றி பெருமைக்குரியது என்றும் பதிவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com