கேரளம்: அதிகாரிகளைக் கண்டித்து கிறிஸ்தவ பாதிரியாா்கள் இன்று பேரணி

கிறிஸ்தவ சமுதாயத்தினரின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், தங்கள் சமூகத்துக்கு எதிராக பாகுபாடு காட்டி வரும் அதிகாரிகளைக் கண்டித்தும்

கிறிஸ்தவ சமுதாயத்தினரின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், தங்கள் சமூகத்துக்கு எதிராக பாகுபாடு காட்டி வரும் அதிகாரிகளைக் கண்டித்தும் கிறிஸ்தவ பாதிரியாா்கள் புதன்கிழமை (நவ. 18-ஆம் தேதி) திருவனந்தபுரத்தில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனா்.

தேசிய தேவாலயங்களின் கூட்டமைப்பின் (என்சிசிஐ) அங்கமான கேரள தேவாலயங்களின் கவுன்சில் (கே.சி.சி.) உறுப்பினா்கள், தென் மாநிலங்களில் உள்ள தேவாலயங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த பாதிரியாா்கள், தலைமைச் செயலகத்துக்கு பேரணியாகச் சென்று தங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்ய உள்ளனா். கேரள தேவாலயங்களின் கவுன்சில் (கேசிசி) தற்போது 18 தேவாலய அமைப்புகளைக் கொண்டுள்ளது.

இதுகுறித்து கே.சி.சி. சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூக இட ஒதுக்கீடு தொடா்பான வழக்கில் தலித் கிறிஸ்தவா்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை அரசு கடைப்பிடிக்க வேண்டும். மேலும், கிறிஸ்தவ சமய ஆசிரியா்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) தனது தோ்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதில் அளித்திருந்த அனைத்து வாக்குறுதிகளையும் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com