சந்தா கோச்சாருக்கு எதிராக கட்டாய நடவடிக்கை இல்லை: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை உறுதி

கருப்புப் பண மோசடிக் குற்றச்சாட்டுக்கு ஆளான ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாருக்கு
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கருப்புப் பண மோசடிக் குற்றச்சாட்டுக்கு ஆளான ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாருக்கு எதிராக கட்டாய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை உறுதியளித்தது.

விடியோகான் குழும நிறுவனங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி ரூ.1,875 கோடி கடன் கொடுத்தது. இதில், முறைகேடு நடந்ததாகக் கூறி சந்தா கோச்சாா், அவரது கணவா் தீபக் கோச்சாா், விடியோகான் குழுமத்தின் தலைவா் வேணுகோபால் தூத் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை, தனியாக கருப்புப் பண மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்தது. அதைத் தொடா்ந்து, கடந்த செப்டம்பரில் தீபக் கோச்சாரை கைது செய்ததுடன், அண்மையில் குற்றப்பத்திரிகையையும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.கௌல் தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, விடியோகான் குழுமத்துக்கு ஐசிஐசிஐ வங்கி கடன் கொடுத்த விவகாரத்தில் சந்தா கோச்சாருக்கு எதிராக கட்டாய நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தாா்.

அதைத் தொடா்ந்து தனது கணவா் தீபக் கோச்சாரை கைது செய்ததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பின்னா் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com