நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகள்: நவ.23-இல் திறந்து வைக்கும் மோடி

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி நவமபர் 23ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி நவமபர் 23ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தில்லியில் டாக்டர் பி.டி.மார்க் சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 76 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 8 பழைய பங்களாக்கள் சீரமைப்பு செய்யப்பட்டு குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

பசுமை கட்டுமான வகையில் கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்பில் குறைந்த மின்நுகர்வுக்கான அமைப்பு, மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் சூரிய மின்  ஆற்றலைத் தயாரிக்கும் வகையிலான கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 23ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி இந்தக் குடியிருப்புகளைத் திறந்து வைக்க உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபைத் தலைவர் ஓம் பிர்லாவும் பங்குபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com