
ஹிமாசலில் மலையிலிருந்து தவறி விழுந்து சுற்றுலாப் பயணி பலி
ஹிமாச பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் மலையிலிருந்து கீழே தவறி விழுந்து சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.
தில்லியின் கரம்புராவைச் சேர்ந்த அருண்குமார் கௌர்(23), தனது நண்பர்களுடன் குல்லாவின் மலானா பகுதியில் உள்ள முகாமுக்குச் சென்றதாக குல்லு காவல் கண்காணிப்பாளர் கௌரவ் சிங் தெரிவித்தார்.
கௌர் அன்றிரவு தனது நண்பர்களுடன் மதுபானம் அருந்தியுள்ளான். சரியாக 12.30 மணியளவில் இணைய இணைப்பு குறைவாக இருந்ததால், தங்கியிருந்த கூடாரத்தை விட்டு வெளியேறியுள்ளான்.
அருண்குமார் கௌர் திரும்ப வராத நிலையில், அவரது நண்பர்கள் அவனைத் தேடத் தொடங்கினர். ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர், சனிக்கிழமை காலை கௌர் தங்கியிருந்த கூடாரத்தின் மலையிலிருந்து 150 மீட்டர் கீழ் அவனது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
மதுபோதையில் மலையிலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். சடலத்தைக் கைபற்றி பிரேதப் பரிசோதனை அனுப்பிவைத்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...